கொரோனா தடுப்பூசி கோர்பேவாக்ஸ் விலை குறைப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா தடுப்பூசி கோர்பேவாக்ஸ் விலையைக் குறைத்து அத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வரிசையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள கோர்பேவாக்ஸ் தடுப்பூசியும் இப்பொழுது அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியின் பங்கு மிக முக்கியமானது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில் இதுவரை 191.37 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் பங்கு முக்கிய அங்கம் வகிப்பதாலும், மேலும் தடுப்பூசியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளதால் பயோலாஜிக்கல் - இ நிறுவனம் தடுப்பூசியின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதுவரை கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் விலை 840 ஆக இருந்த நிலையில் தற்போது 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இதர வரிகளுடன் சேர்த்து ரூபாய் 400க்கு தடுப்பூசி கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biological e limited reduced corbevax rate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->