பட்டபகலில் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட போலீசார்! - Seithipunal
Seithipunal


பீகார், நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொஹ்சராய் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ஒரு காவலர் அந்த வழியாக வாகனம் ஒட்டி வந்த ஓட்டுனாரிடம் லஞ்சம் வாங்கியதாகவும் அதனை அருகில் இருந்த சக காவலர் தட்டி கேட்டதாகவும் தெரிகிறது. 

இதனால் காவலர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். 

இரண்டு காவலர்களும் பட்டபகலில் முக்கிய சாலையில் நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் அந்த வழியாகச் சென்ற சிலர் இந்த சண்டை காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 

இதனை தொடர்ந்து சண்டையிட்ட 2 காவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் சாலையில் நின்று கொண்டு சண்டை போட்ட 2 காவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar 2 policemen fighting road 


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal