சுங்கக் கட்டணத்தில் பெரிய மாற்றம்...! - ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும்...! - Seithipunal
Seithipunal


தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் தற்போது வாகன ஓட்டிகள் ரொக்கம், பாஸ்டேக் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால், பண பரிவர்த்தனையை முழுமையாக டிஜிட்டல் பாதைக்கு மாற்றும் நோக்கில், சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் வசூலிப்பதை முற்றிலுமாக நிறுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

மேலும், புதிய நடைமுறையின் படி, இனிமேல் பயணிகள் பாஸ்டேக் அல்லது யு.பி.ஐ. உள்ளிட்ட டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் மட்டுமே சுங்கத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

அதுமட்டுமின்றி ரொக்கப் பரிவர்த்தனைக்கு முழு தடை விதிக்கும் இந்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளதால், வாகன ஓட்டிகள் முன்கூட்டியே டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்த தயாராக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Big change customs fees Digital transactions only from April 1st


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->