அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: இறந்தவர்களின் தகவலை வெளியிட மறுக்கும் சுகாதாரத் துறை! 
                                    
                                    
                                   Bengal Increasing incidence dengue 
 
                                 
                               
                                
                                      
                                            மாநில சுகாதாரத்துறை, மேற்கு வங்கத்தில் 38 ஆயிரத்திற்கும் மேல் டெங்கு பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி 38,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு தொடர்பான இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் பல்வேறு மாவட்டங்களில் பலியானவர்களின் உண்மை தகவலை சுகாதாரத் துறை வெளியிட மறுப்பு தெரிவிக்கிறது. 
வடக்கு வங்காளம் மால்டாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மேலும் அந்த பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மாநில தலைநகரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்புக்கு மத்தியில் கொல்கத்தா நகராட்சி சுகாதார மையங்களை வாரம் முழுவதும் இயக்க முடிவு செய்துள்ளது. .
மேலும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அடுத்த 2 மாதங்கள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       Bengal Increasing incidence dengue