வந்தே பாரத் ரெயில் விபத்தைக் குறைக்க தண்டவாளத்தில் தடுப்பு வேலி.! - Seithipunal
Seithipunal


நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி முதல் மும்பை - காந்திநகர் இடையே அதிவேக வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவை தொடங்கியது முதல் வந்தே பாரத் ரெயில் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. 

இந்த விபத்தினால் ரெயிலின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பபட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நான்காவது முறையாக குஜராத் மாநிலம் உத்வாடா - வாபி இடையே மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது.

இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக மும்பை - ஆமதாபாத் இடையே தண்டவாளத்தையொட்டி ரூ.264 கோடி செலவில் தடுப்பு வேலி அமைப்பதற்கு மேற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து, நேற்று முன்தினம் மேற்கு ரெயில்வே பொது மேலாளர் அசோக் மிஸ்ரா தெரிவித்ததாவது, " மும்பை - ஆமதாபாத் இடையே 620 கி.மீ. தடுப்பு வேலி அமைப்பதற்கு ரூ.264 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த வேலியை கால்நடைகள் கடந்து செல்ல முடியாத அளவிற்கு 'டயிள்யூ - பீம்' என்ற வடிவில் அமைக்கப்படவுள்ளது. தரையில் இருந்து ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு இந்த தடுப்பு வேலி இருக்கும்" என்று மேற்கு ரெயில்வே பொது மேலாளர் அசோக் மிஸ்ரா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Barrier fence in railway trake western railway allounce


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->