சபரிமலையில் நுழைந்த பக்தர்கள் வெளியேற்றம்.. பக்தர்கள் நுழைய தடை.! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு வாரமாகவே கேரள மாநிலத்தில், கன மழை பெய்து வருகின்றது. தொடர் கனமழையினால் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக அணைகளுக்கு வருகின்ற நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

இதன் காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றது. எனவே, அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடப்பட்டு இருக்கின்றது. கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

எனவே, கேரளாவில் உள்ள 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கின்றது. இதற்கிடையில் மழையினால் வீடுகள் இடிந்தும், வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 20 பேர் பலியாகி இருக்கின்றனர். மலையோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு இருக்கின்றது. அத்துடன் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து, இந்த பகுதிகளில் வசித்தவர்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே, மாநிலம் முழுதும் 1000-கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இதில் 4000-கும் மேற்பட்டோர் தங்கி இருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், வருடம் தோறும் நடத்தப்படும் நிரபுதாரி கொண்டாட்டங்களினால், சபரிமலை கோவிலில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பத்தனம்திட்டா பகுதியில் பெய்து வருகின்ற மழையை முன்னிட்டு மாவட்ட பேரிடர் மேலாண் கழகம் இன்று ரெட் அலர்ட் விடுத்து இருக்கின்றது.

இதனை தொடர்ந்து, தற்போது பக்தர்களின் வருகைக்கு சபரிமலை கோவிலில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் இருக்கின்ற பக்தர்களையும் வெளியேற கேட்டுக் கொண்டு இருக்கின்றது. இதனை தொடர்ந்து, இன்றிரவு 10 மணியளவில் சன்னதி நடை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakthars not allowed In sabarimala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->