இஸ்லாமியரை சிக்க வைக்க சதி.. பசுவை கொன்ற பஜ்ரங்தள் தலைவர் கைது.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இஸ்லாமியரை சித்த வைப்பதற்காக பசுவதை செய்த புகாரில் பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட தலைவர் மோனு பஜ்ரங்கி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த முகமது என்ற இஸ்லாமியரை சிக்க வைக்க இவர்கள் ஒன்றிணைந்து பசுவைக் கொண்டு அந்த இடத்தில் முகமது படத்தை போட்டு விட்டு சென்றனர்.

ஆனால் போலீசார் முகமது மீது நடவடிக்கை எடுக்காமல் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் வேறு ஒரு சதி திட்டத்தை தீட்டிய பஜ்ரங்கி 2வது ஒரு பசுவைக் கொண்றதோடு, நடவடிக்கை எடுக்காத தலைமை காவல் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரச்சனையை கிளப்பியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பஜ்ரங்கி மற்றும் அவர்களை கூட்டாளிகள் இணைந்து திட்டம் தீட்டி பசுவை கொன்றது தெரிய வந்தது அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bajranthal leader arrested for murdered cow


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->