ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான் நீக்கம்..!
Babar Azam and Rizwan dropped from Pakistan squad for Asia Cup
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 09-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 08 அணிகள் பங்கேற்கின்றன. ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 02 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிவில் 'ஏ' இல் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-04 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கவுள்ளது. அதனை தொடர்ந்து, அரசியல் ரீதியிலும், விளையாட்டு ரீதியிலும் பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. செப்.19-ந் தேதி ஓமனை அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.சல்மான் அலி ஆகா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். யாரும் எதிர்பாராத அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி வீரரகளான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானுக்கு இடம் பெறவில்லை.
பாகிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு;
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பக்கார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹூசைன் தலாட், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜுனியர், ஷகிப்சடா பர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷாகின் ஷா அப்ரிடி, சுப்டான் மொஹீம்.
English Summary
Babar Azam and Rizwan dropped from Pakistan squad for Asia Cup