மீண்டும் தொடங்கபோகும் அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நீண்ட ஆண்டுகளாக நடைபெற்ற அயோத்தி வழக்கில் முன்னள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமைலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மறுசீராய்வு  மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற அமைப்பு ஆலோசனை கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் அயோத்தி தீர்ப்பை மறுசீராய்வு அவசியமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜமியத் உலமா-இ-ஹிந்த் நிர்வாகிகள், அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு செய்வது தொடர்பாக ஜமியத் உலமா-இ-ஹிந்த் நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு எடுத்த முடிவுகளின்படி, அயோத்தி நிலம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுவை இன்று தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

இந்தநிலையில், அயோத்தி தீர்ப்பை எதிர்த்து ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதால் அயோத்தி தொடர்பான வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடக்கவுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayoti case muslims appeal in supreme court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->