அயோத்தி ராமர் கோவில் கருவறையில் என்ன சிலை?.. ராமஜென்மபூமி அறக்கட்டளை வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுப் பணியை ஸ்ரீராம ஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 3வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும்.

அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சித்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த தேவசரி மகாராஜ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராமர் கோயில் கருவறையில் நிறுவப்படும் ராமர் சிலை குறித்து விவரங்கள் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் ராமர் கோயிலின் கருவறையில் 5 அடி உயரத்தில் நிற்கும் நிலையில் வில் - அம்பு தாங்கிய தோற்றத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தருவிக்கப்படும் 'கிருஷ்ண சிலா' எனப்படும் அரிய வகை கருங்கல்லில் மைசூரை சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் ராமர் சிலையை வடிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayothi ramar temple statue update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->