பணத்துடன் ஏடிஎம் எந்திரத்தை களவாடிய கொள்ளையர்கள் - ராஜஸ்தானில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில், நாகவுர் மாவட்டம் ஜோதியாசி கிராமத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில், ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் உள்ள ஏடிஎம் எந்திரத்தை முகமூடி அணிந்த திருடர்கள் சிலர் அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். 

இந்த நிலையில், ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் எந்திரம் இல்லத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கொள்ளை போன அந்த ஏடிஎம் எந்திரத்தில் 24 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தரப்பில், இரும்பு சங்கிலி மூலம் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து, திறந்த ஜீப்பில் ஏற்றி சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atm machine robbery with money in rajasthan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->