உலகக்கோப்பை கால்பந்து.. கேரளாவில் பிரான்ஸ் - அர்ஜென்டினா திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்றது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றனர். 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் டிசம்பர் 18ம் இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்தது. அதன் பின்னர் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

அதில், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா வீழ்த்தி, உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்‌.

இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்த தினத்தில் கேரள ஜோடி ஒன்று அர்ஜென்டினா, பிரான்ஸ் வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த தீவிர கால்பந்து ரசிகர்களான சச்சின்-அதிரா ஜோடி கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர். மாப்பிள்ளை சச்சின் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் தீவிர ரசிகர். அதேபோல், மணப்பெண் அதிரா பிரான்ஸ் வீரர் எம்பாப்வேயின் தீவிர ரசிகர் இதனால் இருவரும் திருமணத்துக்கான புதிய ஆடைகளின் மேல் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Argentina fan and France fan got married in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->