திடீர் மாரடைப்பு சம்பவங்கள்.. கொரோனா தடுப்பூசி தான் காரணமா.?! மத்திய அரசு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


திடீர் மாரடைப்பினால் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சமீப காலமாக பிரபலங்கள் மற்றும் பலரும் திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நடிகர் விவேக் உயிரிழந்த போது அவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

இதை அடுத்து அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி தான் அவரது உயிரிழப்புக் காரணம் என்று வதந்திகள் பரவியது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சமீபகாலமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது தான் மாரடைப்புக்கு காரணம் என்று கூறுவதற்கு அறிவியல் ரீதியாக எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று மக்களவை உறுப்பினர் ராஜு ரஞ்சன் சிங் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பவார் பதில் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are COVID Vaccine make Heart attack


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->