டெல்லி முதல்வராகிறாரா கெஜ்ரிவால் மனைவி?   - Seithipunal
Seithipunal


டெல்லியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து, இந்த ஊழல் வழக்கில் ஆம் ஆத்மிக்கு ரூ. 100 கோடி வழங்கப்பட்டதில் தொடர்புடைய பாரத் ராஷ்ட்ர சமிதி எம்எல்சி கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரவிந்த் கேஜ்ரிவாலிடம் மார்ச் 28-ம் தேதி வரை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் படி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். 

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதிலாக அவரது மனைவி சுனிதா முதல்வராகப் பதவியேற்கலாம் என்று தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aravind kejriwal wife sunita kejriwal chance of delhi cm


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->