சீனாவில் கொரோனா பரவல் எதிரொலி! இந்தியாவில் ஐஃபோன்கள் உற்பத்தி அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உலகின் ஸ்மார்ட்போன் சந்தையில் முதன்மையாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், ஐபேடு உள்ளிட்ட  தயாரிப்புகள் 90% சீனாவில் தயாரிக்கப்படுகிறது. 

இந்நிலையில் சீனாவில் ஷாங்காய் உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மிக கடுமையாக இருப்பதால் ஆப்பிள் ஐஃபோன்கள் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உற்பத்தியின் இழப்பினை ஈடுகட்ட இந்தியா, வியட்நாம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள தனது ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன்கள் ஒப்பந்த முறையில் தயாராகின்றன. இதனால் கடந்தாண்டு உற்பத்தி 3.1 விழுக்காடாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 7 ஆக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apple company focuses on India for manufacturing


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->