செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! - Seithipunal
Seithipunal


தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவருடைய நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவ சகாயம், அன்னராஜ் உள்ளிட்ட அவர் மீது மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நான்கு வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் பதிவான நான்கு வழக்குகளை சென்னை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. செந்தில் பாலாஜி தன் மீதான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதே போன்று சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது எனவும் தங்களையும் இந்த வழக்கில் இணைக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் செந்தில் பாலாஜிக்கு எதிராக இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அனைத்து மனுக்களையும் விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவையும் அமலாக்கத்துறையில் மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில் நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கையின் மீது மீண்டும் முதலில் இருந்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றப்படவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான புகார்களை மீண்டும் தொடக்கத்தில் இருந்து விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதை ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்ததோடு மேல்முறையீடு வழக்கு விசாரணை குறித்தான கடிதத்தை நீதிமன்றத்தில் வழங்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தி உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Appeal to the Supreme Court against Senthil Balaji


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->