இந்தியாவை அவமதிக்க ஒப்பந்தம் செய்துள்ளாரா ராகுல் காந்தி.?! மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


பாரத் ஜோடோ யாத்திரையை முடித்துக்கொண்டு காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்துக்கு ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இந்திய தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். 

கடந்த வாரத்தில் ராகுல் காந்தி தான் லண்டன் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பேசிய போது, இந்தியாவில் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக கூறினார். தொடர்ந்து லண்டனில் இருக்கும் இந்திய செய்தியாளர்கள் அமைப்பினருடன் பேசிய ராகுல் காந்தி இந்தியா அனைத்து இடத்திலும் அமைதியாக இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இந்தியர்களின் குரல்கள் நீடிக்கப்படுவதாக அவர் கூறினார். அத்துடன் பிபிசி நிறுவனம் தற்போது மிகுந்த இன்னலுக்கு ஆளாகி இருப்பதாகவும் மத்திய அரசுக்கு எதிராக பிபிசி பேசுவதை நிறுத்திவிட்டால் அந்நிறுவனத்தின் மீதுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அவர் கூறி இருக்கிறார். 

 இத்தகைய நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தற்போது பேசியுள்ளார். அதில், "வெளிநாட்டிற்கு சென்று இந்தியா பற்றி அவதூறாக பேச வேண்டும் என ராகுல் காந்தி ஒப்பந்தம் எடுத்திருக்கிறார். அவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anurag thakur speech about Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->