எறும்புக்கு பயந்து தற்கொலையா? தெலுங்கானாவை பதறவைத்த இளம்பெண் மரணம்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் மஞ்சேரியலைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஸ்ரீகாந்தின் மனைவி மனுஷா, எறும்புகளைப் பார்த்தாலே கடுமையான பயம் ஏற்படும் மிர்மிகோபோபியா என்ற மனநிலை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறு வயது முதல் இந்த பிரச்சனை இருந்ததால், அவர் தொடர்ந்து மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நேற்று காலை ஸ்ரீகாந்த் வேலைக்குச் சென்றபோது, வீட்டில் இருந்த மனுஷா தனது குழந்தையை அயல்வீட்டில் ஒப்படைத்து, வீட்டு வேலை செய்ய தொடங்கினார். அந்த நேரத்தில் வீட்டில் அதிக அளவில் எறும்புகள் இருப்பதை கண்டு திடீரென பயம் மேலெழுந்தது. பயத்தால் பீதி அடைந்த அவர் மனஅழுத்தத்தில் மிகக் கடுமையான முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

தனது கணவருக்காக ஒரு கடிதம் எழுதி, குழந்தையை கவனிக்கும்படி வேண்டி, மாமியாரைப் பற்றி நினைவூட்டியும் எழுதியுள்ளார். அதன் பின்னர் மனுஷா வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மனுஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சிறு உயிரினம் ஒன்றுக்கான பயம் எப்படி தீவிரமான மனநிலையை உருவாக்கி, ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்தது என்பதில் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ant fear young woman suicide Police Investigation 


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->