#BREAKING: கர்நாடக மாநில பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 10 மாநில சட்டமன்ற பொது தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக 10 மாநில சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில தேர்தலுக்காக பாஜக இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே காவல்துறை அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றி வந்த நிலையில் தற்பொழுது அம்மாநில தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், இணை பொறுப்பாளராக அண்ணாமலையையும் நியமித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அர்ஜுன் சிங் நியமித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai appointed as coincharge of Karnataka election


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->