அடுத்த டார்கெட் மாஜி சி.எம் மகன்! ரவுண்டு கட்டும் சி.ஐ.டி! பரபரப்பில் ஆந்திர மாநிலம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு செய்ததாக ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 9ம் தேதி சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் தற்போது உள்ளார்.

வரும் அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். சந்திரபாபு நாயுடுவை ஜாமினில் எடுப்பதற்காக அவருடைய மகன் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்த நிலையில் அமராவதி இன்னர் ரிங் ரோடு ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஜாமீன் கோரிஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது இந்திய குற்றவியல் சட்டம் 41வது பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்புவதாக ஆந்திரப் பிரதேச காவல்துறை சிஐடி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய குற்றவியல் சட்டம் 41வது பிரிவின் கீழ், லோகேஷுக்கு நோட்டீஸ் அனுப்புவதும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் விசாரணையில் சேர வேண்டும் என்றும் சிஐடி நீதிமன்றத்தில் வாதித்துள்ளது. இதனால் ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra CID explain sending court notice to Chandrababu Naidu son


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->