திருமணத்தில் வெறிதீர மதுகுடித்த இளைஞர்.. இழக்கக்கூடாததை இழந்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் முகேஷ் தாகூர் என்ற இளைஞர் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். அங்கே மது விருந்து கொண்டாடப்பட்டுள்ளது. 

பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கின்ற காரணத்தால் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கள்ளச்சாராயத்தை தான் திருமண விருந்தில் விருந்துக்கு வைத்துள்ளனர். இதைக் குடித்த முகேஷ் வீட்டிற்கு வந்த நிலையில் அவரது கண் பார்வை மங்கலாகிப்போனது. 

போதையினால் இப்படி இருக்கிறது என்று அவர் நினைத்தார். ஆனால், மறு நாள் இதை விட மோசமான நிலை ஏற்பட்டது. அவரது பார்வை திறன் குறைந்தவுடன் குடும்பத்தினரிடம் கூறி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சேர்க்கப்பட்டார். 

அப்பொழுது மருத்துவரிடம் தான் மது அருந்தியது குறித்து தெரிவித்தார். கலப்படம் மதுவை அருந்தியதால் உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது என்று மருத்துவர்கள் கூறினர். 

அவருக்கு சிகிச்சை கொடுத்தும் கூட எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது மேல்சிகிச்சைக்காக அருகிலுள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an youngster lost his viewpoint in bihar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->