புகைபழக்கத்தை நிறுத்தி சொந்தவீடு பெற்ற முதியவர்.! பின்னணியில் நெகிழவைக்கும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தைச் சேர்ந்த 75 வயது வேணுகோபாலன் நாயர் என்பவர் தனது புகைப்பழக்கத்தை நிறுத்தியதால் 5 லட்சம் சேமித்து தற்போது சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். 

வேணுகோபாலன் நாயருக்கு 13 வயதில் புகைப்பிடிக்கும் பழக்கம் ஆரம்பித்துள்ளது. அப்பொழுது புகைப்பிடிக்க ஆரம்பித்த நாயர் நாட்கள் செல்ல செல்ல 60 வயதை கடக்கும் பொழுது அதிகபட்ச புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றார். ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. அதாவது 20 சிகரெட். 

ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலை இன்று 50 ரூபாய். ஒரு கட்டத்தில் புகைப்பழக்கத்தின் எதிரொலியாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை சென்று பரிசோதித்தபோது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிர் மீது கொண்ட ஆசையால் 67 வயதில் புகைப்பழக்கத்தை நிறுத்தியுள்ளார். புகைபிடிக்க செலவழிக்கும் பணத்தை சேமித்து வைத்து 8 வருடத்திற்கு பிறகு 5 லட்சம் சேமித்து வைத்துள்ளார். தற்போது அதனை பயனுள்ளதாக மாற்ற தன்னுடைய வீட்டிற்கு மேலே ஒரு மாடி கட்டி வருகின்றார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AN OLD MEN GOT OWN HOUSE WHO STOPPED HIS SMOKING HABIT 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->