சீனாவால் ஆபத்து இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா.! - Seithipunal
Seithipunal


இந்திய பகுதி பெருங்கடலுக்குள் சீனாவின் விமானம் தாங்கி கப்பல்கள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் பசிபிக் கடற்படை கமாண்டர் அட்மிரல் ஜான் அக்கிலினோ தற்போது டெல்லி வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய கடற்பகுதியில் சீன போர்க்கப்பல் ஊடுருவினால் அது ஆச்சரியமான விஷயமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சீனா போர்க்கப்பல்களை மிக அதிக அளவில் குவித்து வருகின்றது. சீனா கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்களான 54 ஃபிரிகேட், 52 d destroyer போன்ற கப்பல்களும் கடல் தாக்குதல் தடுப்பு ஏவுகணைகளும் போன்றவை உலக நாடுகளின் பாதுகாப்புக்கு  மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக இருப்பதாகவும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சீனா அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்திய பெருங்கடலுக்குள் ஊடுருவச் செய்துள்ளதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இனிமேல் இதை சீனா நிறுத்தப்படப் போவதில்லை. 

சீனா போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடலுக்குள் ஊடுருவச் செய்யும் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே வாய்ப்புள்ளது எனஅட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america warning india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->