நாடு முழுவதும் 18 விமான நிலையங்கள் மூடல்.. 200க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து.!!
airport and flight service cancelled in india for operation sindoor
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் காஷ்மீரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
இதனால் வட இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உட்பட குறைந்தது 18 விமான நிலையங்கள் இன்று தற்காலிகமாக மூடப்பட்டன.
ஜம்மு, பதான்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய வடக்கு மற்றும் மேற்கு பகுதி விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும் அங்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

மேலும், ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்த பகுதிகளுக்கான சேவைகளை நிறுத்தின. அதில் இண்டிகோ மட்டும் சுமார் 165 விமானங்களை ரத்து செய்தது.
இதேபோல், ஏர் இந்தியா ஸ்ரீநகர், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் விமானங்களை மே 10 ஆம் தேதி காலை 5.29 மணி வரை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
English Summary
airport and flight service cancelled in india for operation sindoor