விமான பயணம் மேற்கொள்வோர் இனி முக கவசம் அணிய தேவையில்லை! - Seithipunal
Seithipunal


கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான பயணம் மேற்கொள்வோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறையை அனைத்து விமான சேவை நிறுவனங்களும் கடைப்பிடித்து வந்தன. 

இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அந்த உத்தரவில் சில மாற்றங்களை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. அதன்படி விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக விமான பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

ஆனால் முக கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதமோ அல்லது விமான பணியாளர்களின் நடவடிக்கையோ எடுக்கப்படாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் விமான பயணம் மேற்கொள்வோர் கட்டாய முக கவசம் அணிய வேண்டும் என்ற நிலை மாறி உள்ளது. எனினும் மக்கள் தங்களின் சுய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு முக கவசம் அணிவது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air travelers no longer need to wear face mask


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->