நியூயார்கிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் - திடீரென லண்டனுக்கு திருப்பிவிடப்பட்டதற்கு காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் ஏ.ஐ.-102 ரக விமானம் ஒன்று புதுடெல்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. 

இதையடுத்து அந்த விமானம் நார்வே நாட்டில் வந்து கொண்டிருந்த போது, திடீரென இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரில் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் போயிங் 777-337 ரக விமானம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விமானத்தில் முந்நூற்று ஐம்பது பயணிகள் பயணம் செய்ததில் ஒருவருக்கு திடீரென அவரச மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. இதனால், விமானிகள் லண்டனுக்கு செல்ல வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது. 

இதனால், விமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட கூடும் என்று பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர்களில் அவசர மருத்துவ சிகிச்சை யாருக்கு தேவைப்பட்டது? அதன் தொடர்ச்சியாக திடீரென விமானம் வேறு திசைக்கு ஏன்? திருப்பி விடப்பட்டது என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india flight return london for passanger health issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->