மீண்டும் மீண்டுமா..? டெல்லி டூ லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம்: புறப்படுகையில் தொழில்நுட்பக் கோளாறு: பயணிகள் அவதி..!
Air India Dreamliner flight from Delhi to London suffers technical glitch during takeoff
லண்டனுக்கு கிளம்ப இருந்த ஏர் இந்திய ட்ரீம் லைனர் விமானம், மேலே பறக்க இருந்த நிலையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது.
ஏஐ 2017 விமானம் தலைநகர் டில்லியில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கிளம்பியது. ஓடுபாதையில் புறப்பட்ட விமானம் மேலே பறக்க இருந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், வழக்கமான நடைமுறைகளின்படி, அந்த விமானம், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், மாற்று விமானம் மூலம் பயணிகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், பயணிகளுக்கு தேவையான உதவிகளை ஊழியர்கள் செய்து கொடுத்து வருகின்றதாகவும், பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பே எங்களுக்கு அதிக முக்கியத்துவம் எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Air India Dreamliner flight from Delhi to London suffers technical glitch during takeoff