முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கூடுதல் பாதுகாப்பு..! - Seithipunal
Seithipunal


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் இதற்கு பொறுப்பு என்று குற்றம் சுமத்தி கூறி வரும் எதிர்க்கட்சிகள், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர் தலைமையில் நடந்த தேர்தல்களை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஞானேஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவருக்கு 'Z+' பாதுகாப்பு உள்ள நிலையில், தற்போது கூடுதல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

டெல்லி மோதி பாக் காலனியில் உள்ள ஞானேஷ் குமாரின் இல்லம், தேர்தல் ஆணைய அலுவலகம் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது தனிப்பட்ட பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான தற்போதைய போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை என்றும், மாறாக அவரது பாதுகாப்புக்கான சூழல் மற்றும் அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Additional security for Chief Election Commissioner Gyanesh Kumar


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->