ஒருதலைக்காதலால் நடந்த கொடூரம்: பாட்னாவில் சிறுமி மற்றும் சிறுவன் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட குற்றவாளிகள் கைது..! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 31-ஆம் தேதி பாட்னாவில் ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த சிறுமியையும், அவருடன் இருந்த சிறுவனையும் கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்து. இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் பாட்னாவின் ஜானிபூர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில், இரண்டு சிறார்களின் எரிந்த உடல்கள் ஜூலை 31- ஆம் தேதி மீட்கப்பட்டது. இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த கொலை சம்பவம் குறித்து பாட்னா எஸ்.பி. கார்த்திக் கே. சர்மா கூறுகையில், இவ்வழக்கு ஒருதலைக்காதல் விவகாரம் என்றும்,  கொலையாளி சுபம் என்பவருக்கும், பலியான சிறுமிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுபமின் தாயாரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊழியர்களாகப் பணியாற்றியுள்ளனர். இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், பள்ளி மாணவனான ரோஷன் என்பவர் வழியாக சுபம் அந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளார். ஆனால், சிறுமி சுபத்தின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இந்த கொலையைச் செய்வதற்காக புனேவில் வசித்து வந்த சுபம், பாட்னாவிற்கு வந்துள்ளார். திட்டமிட்டபடி, அவர் கடைக்குச் சென்று மண்ணெண்ணெய் வாங்கியுள்ளார். அதன் பின்னர், சிறுமியின் வீட்டிற்குச் சென்றபோது, சிறுமி கதவைத் திறந்துள்ளார்.அப்போது வீட்டினுள் மற்றொரு சிறுவன் உறங்கிக் கொண்டிருந்துள்ளான்.  சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த சுபம், முதலில் அந்த சிறுவனை செங்கல்லால் தாக்கியம், சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர். தடயங்களை அழிக்கும் விதமாக இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் பூதரமாக வெடித்த நிலையில்,  மகாபந்தன் கூட்டணியின் புல்வாரி தொகுதி எம்எல்ஏ கோபால் ரவிதாஸ் உட்பட 10 பேர் மீதும், அடையாளம் தெரியாத 30 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே, வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, வெறும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிந்து, சுபம் மற்றும் அவரது நண்பர் ரோஷன் குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக  பாட்னா எஸ்.பி. கார்த்திக் கே. சர்மா குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accused arrested in Patna girl and boy burnt to death due to head on collision


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->