அபிநந்தனுக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய கவுரவம்.. பாராளுமன்றத்தில் நடந்த விவாதம்.!! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாவட்டத்தில் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. 

அப்போது இந்திய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்ட தாயகம் திரும்பிய அபிநந்தன், பின் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு பணிக்குத் திரும்பினார். 

இந்நிலையில்,  பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீட்கப்பட்ட அபிநந்தன் உரிய விருது அளிக்க வேண்டும் மற்றும் அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abhinandan mustache for national mustache


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->