மாதா மாதம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் ஐஏஎஸ்- கண்டித்த கணவன் மீது வரதட்சணை புகார்!! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் பதவியில் இருப்பவர் ஜோதி மவுர்யா. ஐஏஎஸ் அதிகாரியான இவரது கணவர் அலோக் மவுர்யா, உ.பி. மாநில பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஊர்க்காவல் துறை டிஐஜி வி.கே. மவுர்யாவிடம், அலோக் மவுர்யா சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளார். அதில் ஜோதிக்கும் எனக்கும் 2010ம் ஆண்டு திருமணமானது. ஜோதி ஐஏஎஸ் படிக்க நான் உதவி செய்தேன். யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 16-வது இடத்திலும், பெண்கள் பிரிவில் 3-வது இடத்திலும் ஜோதி மவுர்யா தேர்ச்சி பெற்று அதிகாரியானார்.

அதன்பிறகு 2015ம் ஆண்டு எங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. 2019ம் ஆண்டு வரை எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு ஜோதியின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் தெரிந்தது. மாதம்தோறும் சுமார் ரூ.6 லட்சம் அளவுக்கு அவர் லஞ்சம் வாங்க தொடங்கினார்.

இதை அவரே தன் டைரியில் குறிப்பிடும் வைத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் 2020ஆம் ஆண்டு  காஜியாபாத் ஊர்க்காவல் படை மாவட்ட கமாண்டண்டுடன் நட்பு ரீதியாக ஜோதி பழகி வந்துள்ளார்.

இதுதொடர்பாக நான் கேள்வி கேட்டபோது உடல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். இந்நிலையில் கடந்த வாரம் எனக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது.

அந்த நபர் உடனடியாக ஜோதியிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டு அமைதியாக சென்றுவிடவேண்டும், இல்லாவிட்டால் தன்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார் என்று அதில் கூறியுள்ளார். இந்நிலையில் ஜோதி மவுர்யா தன் கணவர் வரதட்சணை கொடுமை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A dowry complaint against the IAS reprimanded husband who took a bribe of Rs 6 lakh per month


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->