ஹஜ் பயணத்தில் 98 இந்தியர்கள் உயிரிழப்பு - மத்திய வெளியுறவுத் துறை தகவல்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் இஸ்லாமியர்கள் மக்காவில் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அப்போது உயிரிழப்பு ஏற்படும் சம்பவமும் நடக்கின்றது. அந்த வகையில், இந்த ஆண்டு 1,75,000 இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது 187 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயிரிழப்புக்கு மெக்காவில் உயர்ந்து வரும் வெப்பநிலையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்து இருப்பதாவது:- "ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு இதுவரை 1,75,000 இந்தியர்கள் ஹஜ்ஜுக்காக சவுதிக்கு வருகை தந்துள்ளனர்.

முக்கிய ஹஜ் காலம் ஜூலை 9 முதல் 22 வரை ஆகும். இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின்போது 98 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் இறந்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டு எண்ணிக்கை 187 ஆக இருந்தது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

98 indian died in haj yatra


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->