மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 பேர் விடுதலை – 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


2008-ம் ஆண்டு மாலேகான் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 17 ஆண்டுகளுக்குப் பின்னர், மும்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) சிறப்பு நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த  2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29தேதி மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகேமோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பில்  6 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் .குற்றச்சாட்டுகள் மற்றும் கைது,இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர்.

இதில் முக்கிய குற்றவாளிகள்:முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர்முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆவர்,

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு மற்றும் வெடிபொருட்கள் வழங்கியதாக புரோஹித் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து நடந்த விசாரணை நிலையில் ஆரம்பத்தில் மகாராஷ்டிர ATS விசாரணை செய்தது.2011-ல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

இதையடுத்து 2018-ல் பிரக்யா சிங் தாக்கூர் உள்பட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.சாட்சிகள் மற்றும் சிக்கல்கள்,323 அரசுத் தரப்பு சாட்சிகள், 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

சுமார் 40 சாட்சிகள் தங்கள் வாக்குமூலத்தை மாற்றினர்.தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன் நீதிபதி மாற்றம் ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த வழக்குகட ந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அப்போது அரசு தரப்பின் வாதம் நடந்தபோது குற்றவாளிகள் முஸ்லிம் சமூகத்தை பயமுறுத்த, வகுப்புவாத பதற்றம் உருவாக்க திட்டமிட்டனர்.சதிகாரர்கள் நேரடியாக ஈடுபட்டனர் என NIA வாதம் செய்தனர் .

 நீதிமன்றத்தின் தீர்ப்பு:வழக்கில் மதம் சார்ந்த ஆதாரங்கள் மட்டுமே உள்ளது.மோசடியானமருத்துவசான்றுகள்,ஆர்.டி.எக்ஸ்கொண்டு வந்தது நிரூபிக்கவில்லை,வெடிகுண்டு வைத்த மோட்டார் சைக்கிளின் உரிமை நிரூபிக்கவில்லை எனக் குறிப்பிட்டது.தெளிவான ஆதாரங்கள் இல்லாததால், அனைவரும் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம்,காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த தீர்ப்பு பல்வேறு வெவ்வேறு அரசியல் மற்றும் சமூக கருத்துகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 people acquitted in the Malegaon bomb blast case Verdict after 17 years


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->