நீதிமன்ற வளாகத்தில் கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு - 6 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்தில் கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் மிதிலேஷ் கிரி, சூர்ய பிரகாஷ் ராய். இவர்கள் இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக இவர்கள் இரண்டு பேரும் நேற்று முன்தினம் ஜான்பூரில் உள்ள தலைமை நீதித்துறை மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து 2 மர்மநகர்கள் திடீரென துப்பாக்கியால் இவர்களுக்கு இரண்டு பேரையும் சரமாரியாக சுட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

இதையடுத்து பலத்த காயமடைந்த இரண்டு பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 policeman suspended for Firing on prisoners in court premises in uttar pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->