சுதந்திர தின விழா - விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு.!!
5 layer security guard in chennai airport
இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடபட உள்ளது. இந்த சுதந்திர தின விழாவின் போது எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் படி, 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையங்களில் பயணம் செய்யும் உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
5 layer security guard in chennai airport