திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது கோர விபத்து - ஆற்றில் லாரி கவிழ்ந்து 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை சேர்ந்த சிலர் லாரியில் திகம்கர் மாவட்டத்தில் உள்ள ஜதாரா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது டாடியா மாவட்டத்தில் உள்ள புஹாரா கிராமத்திற்கு அருகே சென்றபோது, இன்று காலை 6 மணி அளவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் நான்கு சிறார்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரங்கல் தெரிவித்த உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, பலியானவர்கள் பலேஹரியைச் சேர்ந்த காடிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed as truck falls into river in Datia Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->