உத்தரகாண்ட் : ஒரே சிறையில் ஒரு பெண் உள்பட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் சிறையில் உள்ள 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோய் மிகவும் கொடுமையான நோயாக கருதப்பட்டது. அந்த வகையில் மிகவும் வேகமாக பரவிய நிலையில் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி என்ற சிறையில் ஒரு பெண் கைதி உள்ளிட்ட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட சம்பவம் சிறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து சிறையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற கைதிகளுக்கும் எய்ட்ஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறையில் 1629 ஆண் கைதிகளும், 70 பெண் கைதிகளும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

44 prisons affected HIV in uttrakhand Jail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->