உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணிபுரியும் அனிருத்தா போஸ், ரவிந்திர பட், ஜெ.பி பர்திவாலா மனோஜ் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஒரே பாலின திருமணம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமைப்பில் ஒருவராக நீதிபதி ரவீந்திர பட் கடந்த வியாழக்கிழமை வரை அமர்ந்திருந்தார்.

இதன் காரணமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உட்பட நான்கு நீதிபதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை நடைபெற உள்ள அனைத்து வாதங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவசரகால மருத்துவ சூழல் காரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதி கவுல் நீதிமன்றம் வருவதை தவிர்த்து உள்ளார். இதன் காரணமாக தலைமை நீதிபதி அமர்வில் உள்ள வழக்குகளில் நிலுவைகளை தவிர்க்கும் நோக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு ஒதுக்க உச்சநீதிமன்ற பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Supreme Court judges confirmed to Corona positive


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->