நாளை மறுதினம் முதல் வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.! - Seithipunal
Seithipunal


வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், மார்ச் 26 (4-வது சனிக்கிழமை விடுமுறை), மார்ச் 27 (ஞாயிறு விடுமுறை) மற்றும் மார்ச் 28, 29 வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகளின் சேவை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து இருந்தாலும் இதனால் தங்கள் வங்கியின் சேவைகளில் குறைந்தளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 days holiday for banks from tomorrow


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->