டெல்லிக்கு கடத்திவரப்பட்ட ரூ.27 கோடி மதிப்புள்ள தங்கம், வைரக்கல் பதித்த வாட்ச் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


டெல்லிக்கு கடத்திவரப்பட்ட ரூ.27 கோடி மதிப்புள்ள தங்கம், வைரக்கல் பதித்த வாட்ச் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

துபாயில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி வரப்படுவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து, அதிகாரிகள் துபாயிலிருந்து டெல்லி வந்த விமான பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு பயணியிடமிருந்து விலை உயர்ந்த வாட்ச்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அந்த பயணியின் பையை சோதனை செய்ததில், ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த 7 வாட்ச்கள் இருந்தன. இதில், ஜேக்கப் அண்ட் கோ என்ற வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டது என தெரியவந்தது. 

இந்த ஒரு வாட்சின் மதிப்பு 27 கோடியே 9 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாட்ச்களுடன் சேர்த்து தங்கம், வைரம் பதிக்கப்பட்ட கைசெயின் மற்றும் ஐபோன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் எனவும், அது 60 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததற்கு சமம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வந்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அந்த நபரும் அவரது உறவினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல கிளைகள் அமைத்து வாட்ச் கடை நடத்தி வருவதும், பறிமுதல் செய்யப்பட்ட 7 வாட்ச்களையும் குஜராத்தை சேர்ந்த பிரபலமான நபருக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பிரபலமான நபர் யார்? என்று கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 crore worth of gold diamond studded watch and expensive items seized in Delhi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->