ஐயோ!!! ஹனி டிராப் வலையில் 160 பேர் சிக்கினர்...! - ஹோட்டல் அறை வீடியோக்களில் இருந்து ரூ.3 கோடி பறிப்பு! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் புதிய வகை இணைய மோசடி ஒன்று வேகமாக பரவி வருகிறது. 'ஹனி டிராப்' ஆப் எனப்படும் 'டேட்டிங் மற்றும் மேட்ரிமோனி' தளங்களை பயன்படுத்தி பெண்களை முன்வைத்து, ஆண்களை சிக்கவைத்து பணம் பறிக்கும் கும்பல்கள் அட்டூழியம் செய்கின்றன.முதலில் சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற வழிகளில் வசதி படைத்த திருமணமான ஆண்களுடன் பெண்கள் நட்பாக பழகுகின்றனர்.

அதன் பிறகு நம்பிக்கையைப் பெற்று, ஹோட்டல்கள் அல்லது பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு நெருக்கமாக பேசிக்கொண்டிருக்கும் போதே, மறைமுக கேமராவில் அவற்றை பதிவு செய்கின்றனர்.அதன் பிறகு, அந்த வீடியோக்களை காட்டி, “கணவருக்கு தெரிந்தால் உயிருடன் இருக்க முடியாது” என்று பெண்கள் கண்ணீர் மல்க நடித்து, ஆண்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

இதில் பணம் கையளித்த பிறகு, அவர்கள் உடனே தொடர்பை முறித்துவிடுகின்றனர். அண்மையில், செகுந்தராபாத் பகுதியை சேர்ந்த பிரபல யோகா குருவே இந்த கும்பலின் வலையில் சிக்கினார்.இதில் இளம்பெண் ஒருவரை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்றபோது, ரகசிய கேமராவில் படம் பிடிக்கப்பட்டது.

பின்னர் கண்ணீருடன் கதறும் பெண்ணின் நாடகத்தை நம்பி, அந்த யோகா குரு மொத்தம் ரூ.26 லட்சம் கொடுக்க நேரிட்டது. ஆனால் அந்த பெண் அதனுடன் மாயமாகிவிட்டார்.இதே போல, அரசு ஊழியர் ஒருவரும் 'ஹனி டிராப்' ஆப்பின் கண்ணில் சிக்கி, ஹோட்டல் அறைக்குச் சென்ற நிலையில் ரூ.20000 பறிக்கப்பட்டது.

இது சில இடங்களில், பைக் அல்லது கார் லிப்ட் கேட்பது போல நடித்தும், ஆண்களை ஹோட்டலுக்குள் இழுத்துச் சென்று வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன.இதுவரை 160 பேரை வலையில் சிக்கவைத்து, ரூ.3 கோடி வரை பறித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், சமூக அவமானம் காரணமாக பலர் புகாரளிக்காமல் அமைதியாக இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து காவலர்கள், “புகார் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பயப்படாமல் முன்வந்து முறையிடுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஹனி டிராப், டேட்டிங், மேட்ரிமோனி, ஓரினச்சேர்க்கை ஆப்புகள் மற்றும் சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

160 people caught honey trap Rs 3 crores seized from hotel room videos


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->