பீகாரை புரட்டிப் போட்டுள்ள மழை வெள்ளம்: 16 லட்சம் மக்கள் பாதிப்பு..!
16 lakh people affected due to rain and floods in Bihar
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. உத்தரகாண்டின் உத்தரகாசியில் மேக வெடிப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாசியில் ஏற்படட் வெள்ளத்தில் சிக்கி 05 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இதனை தொடர்ந்து, உத்தபிரதேச மாநிலத்திலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இது மட்டுமின்றி டெல்லி, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்கிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்த நிலையில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இடைவிடாத கனமழை காரணமாக போஜ்பூர், பாட்னா, பாகல்பூர், வைஷாலி, லகிசாரை, சரன், முங்கர், ககாரியா, பெகுசாரை மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளம் காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்ற நிலையில், அங்கு நாலா புறமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் 16 லட்சம் மக்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 32 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
English Summary
16 lakh people affected due to rain and floods in Bihar