இருசக்கர வாகனங்களில் இருவர் பயணிக்க கூடாது., அதிரடி உத்தரவை பிறப்பித்த மாவட்ட நிர்வாகங்கள்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலம், சிவசாகரில் 144 தடை உத்தரவும், நகாலாந்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுகளை மீறினால் ஐபிசியின் 188 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 

பொது இடங்களில் 5 நபருக்கு மேற்பட்டோர் கூடுவதற்கும், கூட்டங்கள், பேரணிகள், தர்ணாக்கள், ஊர்வலங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றிற்கும், சமூக விரோத மற்றும் தீவிரவாத செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள், 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், பெண்கள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்கள் தவிர, மற்ற அனைவருக்கும் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

பிளாஸ்டிக் கேரிபேக்குகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரும் வரை அமலில் இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 in two districts assam and nagaland


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->