மீண்டும் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு.? பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக தலைமை  செயலாளர் சண்முகம் நேற்று செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். தமிழத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் முதலமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார், அப்போது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிப்பார் என தெரிவித்தார். நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. ஊரடங்கை கடைபிடித்த தமிழக மக்களுக்கு அமைச்சரவை பாராட்டு தெரிவித்தது. காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அமைச்சரவை நன்றி தெரிவித்தது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 in pm modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->