செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, செப்டம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி,

செப்டம்பர் 1– விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 4 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 6 – கர்ம பூஜை காரணமாக ஜார்கண்டில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 7 மற்றும் 8 – ஓணம் பண்டிகை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 9 – இந்திரஜாதா காரணமாக சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 10 – ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தியை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 11 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 18 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 21 – ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தையொட்டி திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 24 – நான்காவது சனிக்கிழமை

செப்டம்பர் 25 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 26 – நவராத்திரி விழாவையொட்டி மணிப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 days holiday in September month


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->