அகமதாபாத் விமான விபத்தின் எதிரொலி: மருத்துவ விடுப்பில் சென்ற 112 விமானிகள்..!
112 pilots on medical leave following Ahmedabad plane crash
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவைச் சேர்ந்த 112 விமானிகள் மருத்துவ விடுப்பில் சென்றதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறித்த விமான விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 270 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர விபத்து நாட்டு மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து விமானிகள் எடுத்த மருத்துவ விடுப்பு தொடர்பாக லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய இணையமைச்சர் முரளீதர் மோகல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
-bzwsq.png)
குஜராத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியாவில் மருத்துவ விடுப்பில் செல்வோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. கடந்த 16-ஆம் தேதி மட்டும் 112 விமானிகள் மருத்துவ விடுப்பில் சென்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக , அதில் 51 கமாண்டர்கள் (பி1). 61 பேர் முதல் அலுவலர்கள் (பி2) ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மனரீதியிலான ஆலோசனை அளிக்க அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். எந்தவொரு பிரச்னையையும் அங்கீகரித்து, சமாளிப்பதில் விமான குழுவினருக்கு உதவவும், ஆதரிக்கவும் முன்னெச்சரிக்கை மற்றும் தண்டனையற்ற திட்டத்தை நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விமான விபத்துகளில் தரையில் உள்ளவர்களும் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு தனி இழப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தனியாக எந்தவொரு கொள்கையும் இல்லை என்று மத்திய இணையமைச்சர் முரளீதர் மோகல் தெரிவித்துள்ளார்.
English Summary
112 pilots on medical leave following Ahmedabad plane crash