மாதவிடாய் வலி அதிகம் உள்ளதா?..! இந்த யோகாசனங்கள் உங்களுக்கும் உதவலாம்..!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். மாதவிடாயின் போது பெண்களுக்கு உடல் ரீதியான, மன ரீதியான மாற்றங்களை எதிர்கொள்வது சில சவாலாகவே உள்ளது.

பீரியட் கிராம்ப்ஸ் எனப்படும் மாதவிடாய் வலியுடன் கோபம், எரிச்சல், அழுகை மற்றும் சோர்வாக உணர்வது உள்ளிட்ட பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படும். 

மாதவிடாய் வலிகள் இயற்கையாக ஏற்படுவதால் மூன்று முதல் 5  நாட்கள் வரை வலி நிவாரணியை நீண்ட காலத்துக்கு பயனபடுத்த முடியாது. தொடர்ச்சியான யோகாசான பயிற்சி மாதவிடாய் காலத்து வலிகளில் இருந்து விடுபட உதவும். மாதவிடாயின் போது வலி குறைய செய்ய வேண்டிய யோகாசன பயிற்சிகள் என்னவென பார்போம்.

பாலாசனா: பாலாசனா என்பது குழந்தைகள் இரண்டு கால்களையும் மண்டியிட்டு அமரும் நிலையைக் குறிக்கிறது. இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் மண்டியிட்டு அமருங்கள். உங்கள் முழங்காலிலிருந்து, கணுக்கால் வரையிலான பகுதி, தரையில் இருக்குமாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.

பின்னர், உங்கள் குதிகாலின் மீது அமர்ந்து கொள்ளுங்கள். மெதுவாக மூச்சை வெளியேற்றி, இரண்டு கைகளையும் முன்புறமாக நீட்டவும். உங்கள் உடலை இடுப்புப் பகுதியில் இருந்து ஸ்ட்ரெட்ச் செய்து முன்புறமாக செல்லவும்.

வயிற்றுப் பகுதி உங்கள் தொடைகளுக்கு மேல் இருக்குமாறும், தலை தரையில் இருக்கும் வகையிலும், கைகள் முன்புறம் ஸ்ட்ரெட்ச் செய்தவாறும் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே உடலை பழைய நிலைக்குக் கொண்டுவரவும்.

15 வினாடிகள் முத்தம் 30 வினாடிகள் வரை இந்த நிலையில் இருப்பது நல்லது. நாளொன்றுக்கு, குறைந்த பட்சம் 10 முறை இந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்.

பத்த கோனாசனா: முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, உங்கள் இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டிக்கொள்ளுங்கள். இரண்டு கால்களையும் மடக்கி, முழங்கால்களுக்கு நடுவில் பாதங்களை வைத்துக்கொள்ளுங்கள். கால்விரல்களை உங்கள் கைகளால் பிடித்தவாறு, உங்களுடைய குதிகால்களை உங்கள் பெல்விஸ் பகுதிக்கு அருகில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

பின்னர்  மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள் அப்போது இரண்டு மூட்டுகளும் தரையில் படுமாறு மெதுவாக உடலை முன்புறமாக வளையுங்கள். உங்களால் எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கு வளைத்தால் போதும்.

உத்தாசனா: முதலில், நீங்கள் உடலை நேராக வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள், மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டே, இடுப்பு மற்றும் தண்டுவடம் பகுதிகளை ஸ்ட்ரெட்ச் செய்து உங்கள் கைகளை தலைக்கு மேலே நீட்டவும்.

மூச்சை வெளியேற்றியவாறு, முன்புறமாக குனியுங்கள். உங்கள் மார்புப்பகுதி, கால்களுக்கு அருகில் வரும்படி குனிய வேண்டும். இரண்டு கைகளையும், உங்கள் இரண்டு பாதங்களுக்கு பக்கத்தில், தரையில் ஊன்றிய நிலையில் வைக்கவும்.

சில நொடிகள் இந்த நிலையில் நீடித்து இருக்கவும். இடுப்புப் பகுதியில் இருந்து நேராக நீங்கள் குனிந்த படியே இந்த பயிற்சி செய்வதால், உடல் வளைந்து குனியும் போது, அல்லது நேராக நிமிரும் போது, அவசரப்பட வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogasanas to help reduce menstrual pain


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal