எல்லையைத் தாண்டி வருமா 'ஷிகெல்லா'...? - கேரளப் பள்ளிகளில் பரவும் ஆபத்தான வயிற்றுப்போக்குத் தொற்று...! - சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு பரவிய ஷிகெல்லா நோய்த்தொற்று, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோரின் உடல்நலனை கடுமையாக பாதித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மாநில சுகாதாரத்துறை மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் நோய்ப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஷிகெல்லா நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.பாதுகாப்பற்ற குடிநீர், மாசடைந்த உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழல் காரணமாக பரவும் இந்த நோய், தற்போது பள்ளி மாணவர்களிடையே பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் உள்ள அந்த பள்ளியின் கிணற்று நீரில் ஷிகெல்லா பாக்டீரியா இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு கல்வி பயிலும் 16 மாணவர்கள் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய்த் தாக்கம் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மாநிலம் முழுவதும் 126-க்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதால் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

வயநாடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரத்தம் மற்றும் சளியுடன் கூடிய வயிற்றுப்போக்கு, தாங்க முடியாத வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று மாநில மருத்துவ அதிகாரி ரேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நோய்ப் பரவலைத் தடுக்க குடிநீரை காய்ச்சி அருந்துதல், கைகளை சுத்தமாக கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுதல் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Shigella cross border Dangerous diarrheal infection spreading Kerala schools Health department issues emergency alert


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->