கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?.! கருச்சிதைவை தவிர்ப்பது எப்படி?.!!  - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த பின்னர் பெண் கணவருடன் சேர்ந்து தனது எதிர்கால சந்ததியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதன் விளைவாக கருவுற துவங்குவாள். திருமணம் முடிந்த 70 நாட்கள் முதல் 90 நாட்களுக்குள் தனது குழந்தையை கருவாக தனது வயிற்றில் சுமப்பதை உணர்ந்து கொண்டு இருப்பாள். இந்த சமயத்தில் சில பெண்களுக்கு சில காரணத்தாலும், சில பெண்களுக்கு உடல் நலக்குறைவின் காரணமாகவும் அபார்சன் என்று அழைக்கப்படும் கருச்சிதைவு ஏற்படும் பிரச்சனையும் உள்ளது. 

பொதுவாக அபார்சன் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து இனி காண்போம். பெண்களின் கருப்பையில் கருவானது சரியாக உருவாகாத பட்சத்தில்., அபார்சன் தானாக நிகழ்ந்துவிடும். சில பெண்களுக்கு கருப்பையின் அமைப்பானது ஒழுங்கற்று இருப்பதன் விளைவாக அபார்சன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பெண்களுக்கு இரட்டை கருப்பை இருத்தல், கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுதல் மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அபார்சன் தவிர்க்க முடியாத ஒன்றாகவோ அல்லது கேன்சர் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் மூலமாக அபார்சன் ஏற்படுகிறது. 

இதுமட்டுமல்லாது மன நலக்கோளாறுகள், நாகரீகம் என்ற பெயரில் புகைப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காரணத்தால் அபார்சன் ஏற்படுகிறது. 

அபார்சன் ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது: 

தாம் கருவுற்று இருக்கிறோம் என்ற தகவல் உறுதியாகியவுடன் கணவனும் - மனைவியும் தாம்பத்தியத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இதன் மூலமாக முதலில் குழந்தையின் கருவானது பாதிக்காமல் இருக்கும். அளவுக்கு அதிகமான பணிகளை பார்ப்பதை குறைத்து விட வேண்டும், அவ்வாறு எதிர்பாராத நிலையில் பணியை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், நல்ல ஓய்வுடன் கூடிய உறக்கம் அவசியம்.

எந்த நேரத்திலும் இயன்றளவு நோய்கள் ஏதும் அண்டாமலும்., அவ்வாறு நோய்களின் பாதிப்பு ஏதேனும் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி., ஆலோசனை பெற்ற பின்னர் தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கருத்தரித்த சுமார் 3 மாதங்கள் வரை வாகனங்களில் செல்லும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும், முடிந்தளவு வீட்டிலேயே இருப்பது நல்லது. இந்த சமயத்தில் உடலுக்கு நல்ல சத்துக்களை வழங்கும், உணவுகளை சாப்பிட்டு சரியான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும். 

கர்ப்பிணி பெண்கள் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பின் சரியான அளவில் இரண்டு பிரச்சனையையும் வைத்திருக்க வேண்டும்., அதிகளவுள்ள எடை கொண்ட பொருட்களை தூக்குவது மற்றும் உடலை வருத்தி செய்யும் பணிகளை தவிர்க்க வேண்டும். மனதால் எந்த விதமான கோபத்திற்கும் உள்ளாகாமல் இருக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why pregnant ladies causes abortion how to prevent it


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->