பருக்கள் உடலின் பிற பகுதிகளில் வராமல், முகத்தில் மட்டுமே மிகுதியாக வருவது ஏன்? - Seithipunal
Seithipunal


 முகத்தின் தோல் பரப்பில் சிவந்த நிறத்தில் தோன்றும் மிகச் சிறு கட்டிகளை முகப்பரு என்கிறோம்.

 இப்பருக்களில் சீழ்த்துளிகளும்  இருக்கும். பெரும்பாலும் 13 முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு முகப்பரு மிகுதியாக வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. பருவ முதிர்ச்சியினால் தோல் சுரப்பிகளில் எண்ணெய் பிசுப்புடைய ஒரு வகை கொழுப்புப் பொருள் மிகுதியாக சுரக்கிறது. இது தோல் பரப்பின் மிக நுண்ணிய துளைகள் வழியே வெளியேறும்போது தோலின் அடிப்புறமுள்ள திசுக்கள் சிவந்து வீங்கி பருக்களாகக் காட்சியளிக்கின்றன.

பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளினால் விளையும் தொற்று காரணமாகவும் நமைச்சல் ஏற்பட்டு மேற்கூறிய பிசுபிசுப்பான கொழுப்பு எண்ணெய் சீழாக மாறி சிவந்து பருக்களாவதுண்டு. ஊட்டமான உணவு உட்கொள்ளாமை, கவலைப்படுதல், நல்ல காற்றோட்டமில்லாத அசுத்தமான சூழலில் வசித்தல் ஆகியவையும் பருக்கள் தோன்றக் காரணம் எனலாம். உடற்பகுதியிலேயே முகம்தான் நுட்பமான உணர்ச்சிகளுக்கும், தூண்டல்களுக்கும் உட்படும் பகுதியாகும். எனவேதான் பருக்கள் அதிகமாக முகத்தில் தோன்றுகின்றன. பருக்கள் மேலும் பரவாமல் தடுக்க நல்ல நீரையும், சோப்பையும் பயன்படுத்தி அவ்வப்போது முகத்தைக் கழுவி தூய்மையான துண்டினால் துடைக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why pimples come to only in face


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->